செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே பொங்கல் விழா மோதலில் 14 பேர் கைது

Published On 2017-01-18 14:56 IST   |   Update On 2017-01-18 14:56:00 IST
ஊத்துக்கோட்டை அருகே பொங்கல் விழாவில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசார் 14 பேரை கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆற்றம்பாக்கத்தில் பொங்கலையொட்டி விளையாட்டு விழா நடத்தப்பட்டது.

பெண்கள் கோலப்போட்டி நடந்த போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து 2 தரப்பினரும் பென்னாலூர்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மோதல் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஜானகிராமன், அருள், டில்லிபாபு, ராஜேஷ் உள்பட 14 பேரை கைது செய்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

Similar News