செய்திகள்

திருச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு

Published On 2017-01-17 19:41 IST   |   Update On 2017-01-17 19:41:00 IST
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி திவாகரன், நடராஜன் ஆகியோரை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து திருச்சியில் அவரது உருவ பொம்மையை எரித்தனர்.

திருச்சி:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி. இவர் நேற்று திவாகரன், நடராஜன் ஆகியோரை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. இன்று இதை கண்டித்து திருச்சி வெஸ்டரி ரவுண்டானா அருகே அ.தி.மு.க. வினர் எம்.டி.ராஜ ராஜ சோழன் தலைமையில் திடீரென குவிந்தனர்.

அங்கு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். பிறகு அவரது உருவ பொம்மை ரோட்டில் வைத்து தீ வைத்து கொளுத்தினர்.

அப்போது அங்கு நின்ற சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் உருவ பொம்மையின் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் தென்னூர் முத்துக்குமார், மணிகண்டன், ரமேஷ், திருச்செல்வம், பாலு, பிரகாஷ், க.பி. பாலசுப்பிர மணியம், சந்திரமோகன், சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News