செய்திகள்

தரங்கம்பாடி அருகே கடலில் குளித்த வாலிபரை அலை இழுத்து சென்றது

Published On 2017-01-17 18:52 IST   |   Update On 2017-01-17 18:52:00 IST
காணும்பொங்கலை முன்னிட்டு நேற்று தரங்கம்பாடி கடலில் குளித்த வாலிபரை அலை இழுத்து சென்றது. இதில் அவர் மூழ்கி இறந்து இருக்கலாம் என தெரிகிறது.

தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே காளகஸ்திநாதபுரத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பிரபாகரன் (வயது 23). இவரும் அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவரும் நண்பர்கள்.

இருவரும் காணும்பொங்கலை முன்னிட்டு நேற்று தரங்கம்பாடி கடலில் குளிக்க சென்றனர். அப்போது பிரபாகரனை திடீரென அலை இழுத்து சென்றது. இதை பார்த்த பழனி அவரை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்று தரங்கம்பாடி கடற்கரையில் அடிக்க உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. இது வரை அலை இழுத்து சென்று 15-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். எனவே இனி இதுபோன்ற உயிர் இழப்புகள் ஏற்படாமல் இருக்க போலீசார் எச்சரிக்கை பலகை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Similar News