செய்திகள்

கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உடல் கரை ஒதுங்கியது

Published On 2017-01-16 13:11 GMT   |   Update On 2017-01-16 13:11 GMT
கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உடல் இன்று காலை கரை ஒதுங்கியது. மற்றொரு மாணவரின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

காலாப்பட்டு:

புதுவை பெரிய காலாப்பட்டை சேர்ந்தவர் ஆனந்த பத்மநாபன். இவருடைய மகன் ஜெகன் (வயது18) இவர் முருங்கப்பாக்கத்தில் உள்ள கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்தார். சின்ன காலாப்பட்டை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் விஜயபாரதி (18) இவர் வேல்ராம்பட்டில் உள்ள தனியார் கலைக்கல்லுரியில் படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை ஜெகனும், விஜயபாரதியும் தங்களுடைய நண்பர்களுடன் சின்னகாலாப்பட்டு கடலில் குளிக்க சென்றனர். ஜெகனும், விஜயபாரதியும் கடலில் இறங்கி குளித்தனர். அவர்களது நண்பர்கள் கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது ராட்சத அலை ஒன்று ஜெகனையும், விஜபாரதியையும் சுருட்டி வாரி இழுத்து சென்றது. அவர்களை அங்கிருந்த மீனவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் இயலவில்லை. அவர்கள் கடல் அலையில் சிக்கி இறந்திருக்காலம் என கருதப்பட்டது. இதையடுத்து அவர்களது உடலை தேடும்பணி கடந்த 2 நாட்காக நடைபெற்று வந்தது. ஆனால் உடல் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று காலை வைத்திக்குப்பம் கடற்கரை பகுதியில் விஜயபாரதியின் உடல் கருகி ஓதுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சோலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஜெகனும் அலையில் சிக்கி இறந்திருக்கலாம் என கருதப்படுவதால் அவரது உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Similar News