செய்திகள்

சசிகலா தலைமையை ஏற்கிறோம்: எம்.ஜி.ஆர். உறவினர் சுதா

Published On 2017-01-16 08:56 GMT   |   Update On 2017-01-16 08:56 GMT
சசிகலா தலைமையை ஏற்க தயாராக இருக்கிறோம் என்று எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் விஜயனின் மனைவி சுதா பேட்டியளித்துள்ளார்.
சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் விஜயன் சில ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டார்.

விஜயனின் மனைவி சுதா, எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் வசித்து வருகிறார். இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அனைவரும் கொண்டாட வேண்டும். எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. உடையக்கூடாது. மக்களுக்கு நல்லது செய்பவர்களை ஆதரிப்போம்.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் அ.தி.மு.க. பிளவு பட்டது. சேவல் அணி, புறா அணி என பிரிந்தது. அதன் விளைவுகளை நாம் சந்தித்தோம். அது போன்ற நிலை வரக்கூடாது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுள்ளது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள். அவருக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்.

இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது. அதன் பிறகு மக்களே முடிவு செய்வார்கள்.

ஜெயலலிதாவின் சாவில் சந்தேகம் இல்லை. அது வீணான வதந்தி. சசிகலா தலைமையை ஏற்க தயாராக இருக்கிறோம். தொண்டர்களின் எண்ணமே எங்கள் எண்ணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News