செய்திகள்
தியாகராய நகரில் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
சென்னை தியாகராய நகரில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
சென்னை தி.நகர் பசுல்லா ரோட்டில் வசித்து வருபவர் கைலாஷ் (58). தொழில் அதிபர்.
தொழில் அதிபரான இவர் மின் விளக்குகளை மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
நேற்று இரவு கைலாஷ் குடும்பத்துடன் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
கைலாசும், அவரது குடும்பத்தினரும், வீட்டில் இல்லாததை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த 100 பவுன் நகை, 4 கிலோ வெள்ளி பொருட்களை சுருட்டிக் கொண்டு தப்பினர்.
இதுபற்றி பாண்டிபஜார் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமார் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வீட்டில் பதிவாகி இருந்த கை ரேகைகளை பதிவு செய்தனர்.
பீரோவை பூட்டி சாவியை அதிலேயே கைலாஷ் வைத்து சென்றது தெரிய வந்தது. இது கொள்ளையர்களுக்கு வசதியாக போய் விட்டது. பீரோவை உடைக்காமல் சத்தம் இல்லாமல் அதனை திறந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
கொள்ளையர்களை தி.நகர் துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இதனால் கொள்ளையர்களை உடனடியாக அடையாளம் காணமுடியவில்லை. இருப்பினும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை போட்டு பார்த்து அதில் சந்தேக நபர்கள் யாராவது நடமாடுகிறார்களா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.