செய்திகள்

அனுமதி அளிக்காவிட்டால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்: கருணாஸ் எம்.எல்.ஏ.அறிவிப்பு

Published On 2017-01-09 10:18 IST   |   Update On 2017-01-09 10:18:00 IST
அனுமதி அளிக்காவிட்டால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

திருவாடானை:

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலங்களை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொங்கல் நெருங்கும் நேரத்தில் மட்டும் பா.ஜ.க.வினர் ஜல்லிக்கட்டு நடத்துவோம் என கூறுகின்றனர். தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும். மனிதர்களுடன் மனிதர்கள் மோதும் மல்யுத்தம், குத்துச் சண்டை, கிக் பாக்ஸிங் போன்றவற்றை அனுமதிக்கும்போது, ஜல்லிக்கட்டை அனுமதிக்க மறுப்பது ஏற்க முடியாதது.

ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத்தர வேண்டும். இல்லையெல் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம். திருவாடானை பகுதியில் நூறு சதவீதம் வறட்சி பாதிப்பு உள்ளது. இது குறித்து அமைச்சரிடம் பேசியுள்ளேன். உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News