செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

Published On 2016-12-28 12:14 IST   |   Update On 2016-12-28 12:14:00 IST
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்த மின் தொழிலாளர்கள் ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகம் முன்பு திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை:

வார்தா புயல் காரணமாக ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், அத்திப்பட்டு, பொன்னேரி, பழவேற்காடு உள்பட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.

மின் இணைப்புகளை சரிசெய்யவும் புதிய மின் கம்பங்கள் நடவும் விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான ஒப்பந்த மின் தொழிலாளர்கள் வரவழைக் கப்பட்டு உள்ளனர். இதற்கு திருவள்ளூர் கோட்டத்தில் உள்ள ஒப்பந்த மின் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று கூறி வந்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்த மின் தொழிலாளர்கள் ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகம் முன்பு திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News