செய்திகள்

கண்ணமங்கலம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

Published On 2016-12-27 14:23 GMT   |   Update On 2016-12-27 14:23 GMT
கண்ணமங்கலம் அருகே வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.

கண்ணமங்கலம்:

ஆரணி தாசில்தார் தமிழ்மணி தலைமையில் வருவாய் ஆய்வாளர் திருவேங்கடம், கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி மற்றும் வருவாய்த்துறையினர் மணல் கடத்தலை தடுக்க ஆற்காடு பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் பகுதியில் அதி வேகமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். லாரியில் அனுமதியின்றி 2 டன் மணல் கடத்திச் சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. மணலுடன் லாரியை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

லாரியை கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் மணல் கடத்தியது தொடர்பாக லாரி உரிமையாளர் காவனூர் வேல்முருகன், டிரைவர் சாமண்டிபுரம் ரமேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் செய்யாறு உதவி கலெக்டர் பிரபு சங்கரிடம் தாசில்தார் தமிழ்மணி பரிந்துரை செய்துள்ளார்.

Similar News