செய்திகள்

தமிழக கவர்னருடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

Published On 2016-12-27 03:07 GMT   |   Update On 2016-12-27 03:07 GMT
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவும், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் 50 நிமிடங்கள் சந்தித்து பேசினார்கள்.
சென்னை:

மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு 7.10 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வந்தார்.

அங்கு தமிழக கவர்னர்(பொறுப்பு) வித்யாசாகர் ராவை அவர் சந்தித்தார். இருவரும் சுமார் 50 நிமிடங்கள் பேசினார்கள். அதன்பின்னர் கவர்னர் மாளிகையில் இருந்து 8 மணியளவில் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியே வந்தார்.

கவர்னருடனான திடீர் சந்திப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனிடம், ‘தினத்தந்தி’ நிருபர் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

நானும், கவர்னரும் சந்தித்தது முழுக்க, முழுக்க எங்களது பழைய நட்பின் அடிப்படையில் தான். நானும், அவரும் (வித்யாசாகர் ராவ்) அமைச்சர்களாக இருந்த நேரத்தில் நெருங்கிய நட்புடன் இருந்தோம். எனவே நட்புணர்வு அடிப்படையில் தான் இந்த சந்திப்பு நடைபெற்றது. பழைய நினைவுகளை மகிழ்ச்சியுடன் இருவரும் பகிர்ந்து கொண்டோம்.

இந்த சந்திப்பில் வேறு எதுவும் முக்கியத்துவம் இல்லை. தமிழகத்தின் வளர்ச்சி நிலை குறித்து பொதுவான கருத்துகளை பேசினோம். தமிழகம் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது என்று எனது கருத்தை அவரிடம் தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News