செய்திகள்
ஈரோட்டில் தக்காளி விலை குறைந்து ரூ.7க்கு விற்பனை
ஈரோட்டில் இன்று காலை ஒரு கிலோ தக்காளி ரூ. 7 க்கு விற்கப்பட்டது. விலை குறைவாக இருந்ததால் பொதுமக்கள் அதிக அளவில் தக்காளியை வாங்கி சென்றனர்.
ஈரோடு:
தக்காளியின் விலை கடந்த சில நாட்களாகவே கிலோ ரூ. 5 முதல் 7 வரை விற்கப்பட்டது. நேற்று இதன் விலை திடீர் என்று உயாந்து கிலோ ரூ. 16 க்கு விற்கப்பட்டது.
ஆந்திராவில் இருந்து வழக்கமாக வரும் தக்காளி நேற்று வரவில்லை என்பதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று ஆந்திராவில் இருந்தும் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்தும் தக்காளி அதிக அளவில் வந்ததால் இதன் விலை குறைந்தது.
இதன் காரணமாக இன்று காலை ஒரு கிலோ தக்காளி ரூ. 7 க்கு விற்கப்பட்டது. விலை குறைவாக இருந்ததால் பொதுமக்கள் அதிக அளவில் தக்காளியை வாங்கி சென்றனர்.