செய்திகள்
மாமல்லபுரத்தில் வங்கியில் பணம் கிடைக்காததால் தாசில்தாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மாமல்லபுரத்தில் வங்கியில் பணம் கிடைக்காததால் தாசில்தாரை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பேரூராட்சி கூட்ட அரங்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் வார்தா புயல் நிவாரண பணிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது
இதில் கலந்து கொள்வதற்காக திருக்கழுக்குன்றம் தாசில்தார் சீதா வந்தபோது அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் எதிரே போலீசாரும் பொதுமக்களும் கூட்டமாக நிற்பதை கண்டு அங்கு சென்று விசாரித்தார்.
வங்கியில் கம்ப்யூட்டர் பழுதானதால் பணம் பரிவர்த்தனை நடக்கவில்லை. இதனால் அவதிக்குள்ளான பொதுமக்கள் சாலை மறியலுக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அப்போது பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு வங்கி குறைபாடுகளை கூறி மீண்டும் சாலையில் அமர முயற்சித்தனர்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வங்கி அதிகாரிகளை அழைத்து பேசி பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.