செய்திகள்
கொடுமுடி அருகே விபத்து 2 வாலிபர்கள் நசுங்கி பலி சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியது
கொடுமுடி அருகே சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியாகினர். விபத்து குறித்து கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவி வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்.
கொடுமுடி:
நாமக்கல்லை சேர்ந்தவர் சூரியப்பிரகாஷ் (வயது 21), சர்வேஸ்வரன் (22).
இவர்கள் 2 பேரும் நாமக்கல்லில் இருந்து ஒரு சரக்கு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து மோட்டார் சைக்கிளை ஏற்றி கொண்டு கோவை செல்வதற்கு ஈரோடு மாவட்டம் கொடுமுடி வழியாக வந்தனர்.
கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூர் அடுத்த ஒத்தக்கடை பக்கம் வந்தபோது எதிரே வந்த ஒரு லாரி சரக்கு ஆட்டோ மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக மோதியது.
இதில் சூரியபிரகாஷ் மற்றும் அவரது நண்பர் சர்வேஸ்வரன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
மோதிய லாரியின் டிரைவர் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு கொடுமுடி போலீசார் விரைந்து சென்றனர்.
பலியான 2 பேரின் உடலை மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரவி வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்.