செய்திகள்
தாம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் - லாரி மோதல்: வாலிபர் பலி
தாம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்:
குரோம்பேட்டை சி.எல்.சி. சாலையை சேர்ந்தவர் கந்தன் (24) கால் டாக்கி டிரைவர். இவரது நண்பர் தேவராஜன்.
நேற்று இரவு இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பெருங்களத்தூரில் உள்ள நண்பரை பார்க்க சென்றனர். ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரம் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கந்தன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். தேவராஜன் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்ததும் தாம்பரம் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று தேவராஜனை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் பார்த்திபனை கைது செய்தனர்.