செய்திகள்

வண்டலூர் பூங்காவில் சீரமைப்பு பணி தீவிரம்

Published On 2016-12-19 15:32 IST   |   Update On 2016-12-19 15:32:00 IST
வண்டலூர் பூங்காவில் வார்தா புயலால் சரிந்த மரங்களை இன்னும் முழுமையாக அப்புறப்படுத்த முடியவில்லை. சீரமைக்கும் பணி முடிய 10 நாட்களுக்கு மேல் ஆகும் என பூங்கா அதிகாரி தெரிவித்தார்.
சென்னை:

வார்தா புயலால் வண்டலூர் பூங்காவில் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்தன. முன் எச்சரிக்கையாக விலங்குகள், பறவைகள் அதன் இருப்பிடத்தில் அடைக்கப்பட்டு இருந்ததால் அவை தப்பிக்கவில்லை.

பூங்காவில் சேதம் அடைந்த 950 மீட்டர் சுற்றுச்சுவர் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு உள்ளது. விலங்குகள் இருப்பிடம், பறவை கூண்டுகள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடக்கும் இடங்களில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து பூங்கா அதிகாரி கூறும் போது சேதம் அடைந்த விலங்குகள் கூண்டு, பறவைகள் இருப்பிடத்தை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. சரிந்த மரங்களை இன்னும் முழுமையாக அப்புறப்படுத்த முடியவில்லை. சீரமைக்கும் பணி முடிய 10 நாட்களுக்கு மேல் ஆகும் என்றார்.

Similar News