செய்திகள்
நீலாங்கரை அருகே அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு
நீலாங்கரை அருகே அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவான்மியூர்:
நீலாங்கரை அடுத்த உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் சங்கர். இவர் 199 அ.தி.மு.க வட்ட கழக செயலாளராக உள்ளார். இவரது மனைவி மேனகா இவருக்கு அ.தி.மு.க சார்பில் கவுன்சிலர் சீட் வழங்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து இவர்க்களுக்கு அடிக்கடி போன் மூலம் கொலை மிரட்டல் வந்தது.
நேற்று சங்கர் வெளியே சென்றுவிட்டார். வீட்டில் மேனகா மட்டும் தனியாக இருந்தார். அப்போது 2 மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்களிடம் மேனகா நீங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் நாங்கள் டெலிபோன் ஒயரை சரி செய்ய வந்துஉள்ளோம் என்று கூறினர். பின்னர் மேனகா வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.
உடனே 2 மர்ம நபர்கள் ஜன்னல் வழியாக பெட்ரோல் வெடிகுண்டை சங்கர் வீட்டிற்குள் வீசினர் அது வெடித்து தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்த கட்டில், மெத்தை, பிரோ, மற்றும் பல பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் அனைவரும் தீயை அனைத்தனர். தகவல் அறிந்ததும் கானத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.
இது குறித்து கானாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.