செய்திகள்

நீலகிரியில் உறைபனி கொட்டியது: மலைக்காய்கறிகள் கருகும் அபாயம்

Published On 2016-12-18 13:24 GMT   |   Update On 2016-12-18 13:24 GMT
நீலகிரியில் உறைபனி கொட்டி வருகிறது. இதனால் தேயிலைச்செடிகள் மற்றும் காய்கறிகளுக்கு உகந்தல்ல. அவைகள் கருகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

ஊட்டி:

மார்கழி மாதம் தொடங்கியதையடுத்து நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலும், இரவு மற்றும் காலை வேளைகளில் நீர்பனியும் கொட்டி வருகிறது. இது தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஊட்டி, அவலாஞ்சி, எம ரால்டு, நடுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி கொட்டி வருகிறது.

இதனால் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதியடைந்தனர். பொதுமக்கள் காலை நேரங்களில் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.

இந்த சீதோஷ்ண நிலை தேயிலைச்செடிகள் மற்றும் காய்கறிகளுக்கு உகந்தல்ல அவைகள் கருகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். அரசு தாவரவியல் பூங்காவில் மலர்ச் செடிகளுக்கு பிளாஸ்டிக் போர்வை போர்த்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் வெப்பநிலை 6 டிகிரி செல்சியசாக இருந்தது.

Similar News