செய்திகள்

ராஜபாளையம் அருகே ஊர்ப்புற நூலகத்தை எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் திறந்து வைத்தார்

Published On 2016-12-17 16:55 GMT   |   Update On 2016-12-17 16:55 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சி, புனல் வேலியில் உள்ள நூலகத்தை விருது நகர் மாவட்ட நூலக அலுவலர் ஜெகதீசன் தலைமையில் தங்கப் பாண்டியன் எம். எல்.ஏ. திறந்து வைத்தார்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சி, புனல் வேலியில் உள்ள நூலகத்தை விருது நகர் மாவட்ட நூலக அலுவலர் ஜெகதீசன் தலைமையில் தங்கப் பாண்டியன் எம். எல்.ஏ. திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய ஜெக தீசன் ராஜபாளையம் வட்டத் தில் உள்ள 24 நூலகங்களை மேம்படுத்துமாறு கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தங்கப் பாண்டியன் எம்.எல்.ஏ. ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நூலகத்தின் கட்டிட மேம்பாடு செய்ய ராஜ பாளையம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி யிலிருந்து ரூ .10 லட்சம் ஒதுக்கப்பட்ட கடிதத்தை நூலக அலுவலர் ஜெகதீசனிடம் கொடுத்தார். மேலும் தொகுதியில் உள்ள 24 நூலகங்களையும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து தங்கப் பாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில் அறிஞர் அண்ணா கூறிய பொன் மொழியான ஒரு நூலகம் திறந்தால் 100 சிறைச் சாலைகள் மூடப்படும் என்றும் தலைவர் கருணாநிதி தமிழ்மொழியை செம்மொழியாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்று கோவையில் செம்மொழி மாநாடு நடத்தினார் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

விழாவில் ராஜபாளையம் நூலகர் மாலா, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, செட்டியார்பட்டி பேரூர் செயலாளர் இளங் கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News