செய்திகள்

சீர்காழியில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2016-12-01 17:30 IST   |   Update On 2016-12-01 17:30:00 IST
சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம் அருகே ஜனநாயக தொழிற்சங்க மையம் சார்பில் மாநில துணைத்தலைவர் என்.குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சீர்காழி:

சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம் அருகே ஜனநாயக தொழிற்சங்க மையம் சார்பில் மாநில துணைத்தலைவர் என்.குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ சங்க நாகை மாவட்ட செயலாளர் விஜயக்குமார், மாவட்ட துணை தலைவர் சேட்டு, சீர்காழி ஆட்டோ சங்க பொறுப்பாளர்கள் முருகேசன், சரவணன், ராஜா, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கரும்பு விவசாய சங்க தலைவர் இமயவரம்பன், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை மாவட்டகுழு இளங்கோவன், சி.பி.ஐ.ஒன்றிய செயலாளர் செல்லப்பா, தொழிங்சங்க கவுரவத்தலைவர் மா.ஈளவளவன், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கை கவன ஈர்ப்பு உரையாற்றினர்.

நாகை மாவட்டம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பர்மிட் முறையை உடனே நடைமுறைப் படுத்தவேண்டும், ஆட்டோ பயண அனுமதியை மாவட்ட முழுமைக்கும் உறுதிப்படுத்த வேண்டும்,கொள்ளிடம் கடைவீதியில் மக்கள் பயன்பெறும் வகையில் ஆட்டோ நிறுத்தம் செய்ய அனுமதியும்,பாதுகாப்பும் வழங்கவேண்டும், ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் அனைவரையும் நலவாரிய உறுப்பினர்களாக அறிவிக்கவேண்டும், அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படும் விண்ணப்பபடிவங்களை தமிழிலேயே வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பபட்டன.

முடிவில் ஆட்டோ ஓட்டுனர் எம்.பிரபாகரன் நன்றி கூறினார்.

Similar News