செய்திகள்

கீழப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் மழை வேண்டி மகா சுதர்சன ஹோமம்

Published On 2016-11-28 14:52 GMT   |   Update On 2016-11-28 14:54 GMT
கீழப்புலியூரில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், மழை வேண்டி மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கீழப்புலியூரில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், உலக நன்மைக்காகவும், உரிய காலத்தில் மழை பெய்ய வேண்டியும், மக்கள் நலமுடன் வாழ வேண்டியும் ஒவ்வொரு மாதமும், சித்திரை நட்சத்திரத்தில் மகா சுதர்சன ஹோமம் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, காலை விநாயகர் பூஜை, மழை வேண்டி மகா சுதர்சன ஹோமம், மக்கள் ஆரோக்கியத்திற்காக தன்வந்தரி ஹோமம், மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக மகாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கீழப்புலியூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர். மழை வேண்டி மகா சுதர்சன ஹோமத்தை ஸ்ரீராமன் ஆதித்யா தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர்.

Similar News