செய்திகள்

பெரம்பலூரில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மனித சங்கிலி போராட்டம்

Published On 2016-11-25 22:57 IST   |   Update On 2016-11-25 22:57:00 IST
பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க.சார்பில் மத்திய அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
பெரம்பலூர்:

ரூ.500,1000 நோட்டு க்களை செல்லாது என அறிவிப்பால் ஏற்பட்ட இன்னல்களுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து மாவட்ட தி.மு.க. சார்பில் பெரம்பலூரில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகர செயலாளர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அண்ணா துரை, மதியழகன், நல்லதம்பி, ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், சோமு, ஜெகதீசன், பேரூர் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியிலிருந்து பாலக்கரை வரை இந்த மனித சங்கிலி நடந்தது.

இதில் மாநில நிர்வாகிகள் அட்சயகோபால், வக்கீல்கள் ராஜேந்திரன், துரைசாமி, டாக்டர் வல்லபன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், வக்கீல்கள் செந்தில்நாதன், மாரிக்கண்ணன், மகா தேவி, பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன், முன்னாள் கவுன்சிலர்கள் அப்துல்பாரூக், சிவக்குமார் உட்பட 600 பேர் கலந்து கொண்டனர்.     

Similar News