செய்திகள்

சாத்தூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

Published On 2016-11-16 16:40 GMT   |   Update On 2016-11-16 16:40 GMT
கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி சாத்தூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

சாத்தூர்:

கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் தமிழ கம் முழுவதிலும் அய்யப்ப பக்தர்கள் இன்று, மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். சாத்தூர் சிவன் கோவில் உள்ள சாஸ்தா அய்யப்பன் சன்னி தானம், முருகன் கோவில் களில் இன்று அதிகாலையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவிந்து விரதத்தை தொடர்ந்தனர்.

குருநாதர்கள் பக்தர்களுக்கு மாலை அணிவித்து விரதத்தை துவக்கி வைத்தனர், சாத்தூர் அய்யப்ப சேவா சங்க குருநாதர். குரு சாமியின் 50-வது ஆண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள்.

‘சுவாமி யே சரணம் அய்யப்பா’ என்ற பக்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். இன்று விரதத்தை தொடங்கும் பக்தர்கள் ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் இருப்பார்கள்.

Similar News