செய்திகள்

புதுக்கோட்டை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 213 மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை

Published On 2016-11-16 17:47 IST   |   Update On 2016-11-16 17:47:00 IST
புதுக்கோட்டை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 213 மனுக்களுக்கு தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கூறியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டா மாறுதல்கோரி 12 மனுக்களும், புதிய குடும்ப அட்டை கோரி 12 மனுக்களும், காவல்துறை நடவடிக்கைக்காக 13 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 15 மனுக்களும், பசுமை வீடு கோரி 7 மனுக்களும், கல்வி உதவித்தொகை கோரி 3 மனுக்களும், முதியோர் உதவித்தொகை கோரி 18 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக 3 மனுக்களும், இதர கோரிக்கைக்காக 130 மனுக்களும் என மொத்தம் 213 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.4560 என மொத்தம் ரூ.36480 மதிப்பில் விலையில்லா சலவைப்பெட்டிகளும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 5 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், வருவாய்த்துறையில் கிராம உதவியாளர் நிலையில் 10 ஆண்டுகள் முடித்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 8 நபர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்விற்கான பணி நியமன ஆணைகளும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 28 நபர்களுக்கு ரூ.627600 மதிப்பில் தீருதவி தொகைக் கான காசோலை களும், புதுக்கோட்டை நகர நில வரித்திட்டம் சார்பில் 51 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டாக் களும் என மொத்தம் ரூ.664080 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.

Similar News