செய்திகள்

கருப்பு பொருளாதாரத்தை ஒழிக்க வேண்டும்: திருமாவளவன்

Published On 2016-11-15 22:42 IST   |   Update On 2016-11-15 22:42:00 IST
நாட்டில் நிலவும் தற்போதையை சிக்கல்களுக்கு தீர்வுகான கருப்பு பொருளாதாரத்தை ஒழிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரத்து செய்த நடவடிக்கை நாடு முழுவதும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடுமுழுவதும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நாட்டில் நிலவும் தற்போதையை சிக்கல்களுக்கு தீர்வுகான கருப்பு பொருளாதாரத்தை ஒழிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து திருமாவளவன் கூறியதாவது:-

கருப்பு பண ஒழிப்பு என்பது வேறு, மீட்பு என்பது வேறு. கருப்பு பணத்தை ஒழிக்க கூடாது மீட்க வேண்டும். கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கருப்பு பொருளாதார நடவடிக்கைகளை ஒழிக்க வேண்டும். அதற்கு முக்கியமாக இந்திய தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். நடைமுறை சிக்கல்களை விட அரசின் கொள்கை முடிவுகள் குறித்து அதிகம் விவாதிக்க வேண்டும்.

அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளே நடைமுறை சிக்கல்களுக்கு காரணம். லஞ்சம், ஊழல் ஒழிப்பு மற்றும் வரி ஏய்ப்புகளை ஒழித்துக்கட்டுதல் ஆகியவை தான் இதற்கு தீர்வுகள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News