செய்திகள்

குன்னூரில் 2-வது நாளாக பலத்த மழை: ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2016-11-15 10:28 GMT   |   Update On 2016-11-15 10:28 GMT
குன்னூரில் 2-வது நாளாக பெய்த பலத்த மழையால் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ராட்சத மரம் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

குன்னூர், பர்லியாறு, கோத்தகிரி, கேத்தி ஆகிய இடங்களில் நேற்று இரவு இடி- மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேறி பூங்கா அருகில் ரோட்டோரத்தில் உள்ள ராட்சத மரம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென விழுந்தது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து எந்திரம் மூலம் மரத்தை அறுத்து வெட்டி அப்புறப்படுத்தினர். இன்று அதிகாலை 5.30 மணி வரை மரம் வெட்டும் பணி நடந்ததால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் பலத்த மழையால் வெலிங்டன் ரெயில் நிலையம் அருகில் உள்ள மரமும் விழுந்தது. இந்த மரத்தையும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி குன்னூர் பகுதியில் பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

குன்னூர்-138

Similar News