செய்திகள்

புதுக்கோட்டையில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டிகள்

Published On 2016-11-10 17:07 IST   |   Update On 2016-11-10 17:07:00 IST
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு விடுதிகளுக்கிடையே மாநில அளவிலான பளுதூக்கும் போட்டிகள் வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

புதக்கோட்டை மாவட்டத்தில் 2016-17-ம் ஆண்டிற்கான விளையாட்டுப் பள்ளி மற்றும் விளையாட்டு விடுதிகளுக்கிடையே மாநில அளவிலான பளுதூக்கும் விளையாட்டுப் போட்டிகள் 12.11.2016 அன்று புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் மாணவ, மாணவிகள் இருபாலருக்கும் 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் நடத்தப்படவுள்ளது.

மாணவர்கள் பிரிவில் தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டியில் விளையாட்டு விடுதி மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

மாணவிகள் பிரிவில் புதுக்கோட்டை மற்றும் நாகர்கோவில் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெறும் மாணவ மற்றும் மாணவியர் மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள்.

Similar News