செய்திகள்

அன்னவாசல் அருகே மின் கம்பத்தின் மீது கார் மோதியது: டாக்டர் உயிர் தப்பினார்

Published On 2016-11-04 23:17 IST   |   Update On 2016-11-04 23:17:00 IST
அன்னவாசல் அருகே கார் மின்கம்பத்தில் மோதியதில் டாக்டர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இலுப்பூர்:

புதுக்கோட்டையை சேர்ந்தவர் ராஜா. டாக்டர். இவர் இலுப்பூரில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவர் தினமும் புதுக்கோட்டையில் இருந்து இலுப்பூருக்கு காரில் சென்று வருவது வழக்கம்.

வழக்கம்போல நேற்று அவர், காரில் இலுப்பூரில் உள்ள கிளினிக்கிற்கு சென்று விட்டு புதுக்கோட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தார். கார் அன்னவாசல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜா, அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் பிடித்தார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.

இதில் அந்த மின்கம்பம் உடைந்து காரின் மீது விழுந்தது. இதில் டாக்டர் ராஜா சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்த ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News