செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2016-11-03 16:03 IST   |   Update On 2016-11-03 16:04:00 IST
ஜெயங்கொண்டம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கெண்டம் அருகே காரைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது45). கூலி தொழிலாளி. இவரது மனைவி பவளக்கொடி (42). இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி ஒரு ஆண்குழந்தை மற்றும் ஒரு பெண் உள்ளனர்.

மகள் சரண்யாவிற்கு கடந்த 1 வருடத்திற்கு முன் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். சக்கரவர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் பவளக்கொடியும், அவரது மகனும் கூலிவேலைக்கு சென்றிருந்த போது சக்கரவர்த்தி வயிற்று வலி தாங்கமுடியாமல் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News