செய்திகள்

மடிப்பாக்கத்தில் டெலிவி‌ஷன் தலையில் விழுந்து 1½ வயது குழந்தை பலி

Published On 2016-11-02 12:36 IST   |   Update On 2016-11-02 12:36:00 IST
மடிப்பாக்கத்தில் டெலிவி‌ஷன் தலையில் விழுந்து 1½ வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலந்தூர்:

மடிப்பாக்கத்தை அடுத்த மூவரசன்பேட்டை பிள்ளை கோவில் தெருவில் வசித்து வருபவர் செந்தில்நாதன். இவரது 1½ வயது பெண் குழந்தை நித்திஷா.

நேற்று இரவு செந்தில் நாதன் குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். அப்போது குழந்தை நித்திஷா ‘டி.வி. ஸ்டான்டை’ பிடித்து எழுந்தாள்.

திடீரென டி.வி. குழந்தையின் தலை மீது விழுந்தது. இதில் நித்திஷாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மீட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நித்திஷா பரிதாபமாக இறந்தாள். இச்சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News