செய்திகள்

கார் டயர் வெடித்து மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி நின்றது

Published On 2016-10-31 22:56 IST   |   Update On 2016-10-31 22:56:00 IST
திருப்பத்தூர்– சிங்கம்புணரி சாலையில் ஏ.காளப்பூர் மேம்பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்த ஒரு காரின் பின்பக்க டயர் திடீரென வெடித்து தாருமாறாக ஓடியது. இதில் 2 பேர் லேசான காயங்களுடன் தப்பினர்.
சிங்கம்புணரி:

திருப்பத்தூர்– சிங்கம்புணரி சாலையில் ஏ.காளப்பூர் மேம்பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்த ஒரு காரின் பின்பக்க டயர் திடீரென வெடித்து தாருமாறாக ஓடியது. மேம்பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்து நின்றது. இதில் தடுப்புச்சுவரில் இருந்த குடிநீர் குழாய் உடைந்து போனது. காரில் இருந்த 2 பேர் லேசான காயங்களுடன் தப்பினார்கள்.

கார் தாருமாறாக ஓடியபோது வேறு வாகனம் ஏதும் வராததால் பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

Similar News