செய்திகள்
உத்திரமேரூர் அருகே தந்தையை வெட்டி கொன்ற மகன்
உத்திரமேரூர் அருகே தந்தையை வெட்டி கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
உத்திரமேரூரை அடுத்த நெல்லூர், திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 50) முடித்திருத்தும் தொழிலாளி. இவரது மகன் பிரகாஷ். திண்டிவனத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
தீபாவளியையொட்டி பிரகாஷ் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று இரவு அதே பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடைபெற்றது.
அப்போது கதிர்வேல் மது போதையில் வந்து ரகளை செய்தார். இதனை பிரகாஷ் கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம அடைந்த கதிர்வேல் முடித்திருத்தும் கத்தியை காட்டி மிரட்டினார்.
உடனே பிரகாஷ் அந்த கத்தியை பறித்து தந்தை கதர்வேலை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கதிர்வேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து உத்திரமேரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிரகாசை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.