செய்திகள்

சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க உறுதி கொள்ள வேண்டும்: தேவர் சிலைக்கு மாலை அணிவித்த வைகோ பேட்டி

Published On 2016-10-30 16:30 IST   |   Update On 2016-10-30 16:29:00 IST
சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க உறுதி கொள்ள வேண்டும் என்று மதுரையில் வைகோ தெரிவித்தார்.

மதுரை:

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராம லிங்கதேவர் சிலைக்கு மாலை அணிவித்த பின் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 41 வருடங்களாக தேவர் குருபூஜையில் பங்கேற்று வருகிறேன். நான் சிறையில் இருந்த வருடங்களில் மட்டும் பங்கேற்கவில்லை. தேவர் ஒரு வலிமையான தலைவர். அனைத்து சாதியையும் கலந்த தலைவர் அவர்.

தமிழகத்தில் இன்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. காவிரி பிரச்சினை உள்பட பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம். இதனை களைவதற்கு நாம் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த குருபூஜையை முன்னிட்டு சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க உறுதி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News