செய்திகள்

இலுப்பூர் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

Published On 2016-10-28 19:18 IST   |   Update On 2016-10-28 19:18:00 IST
இலுப்பூர் அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் குமார், சக்திவேல், வடிவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விராலிமலை:

இலுப்பூர் அருகே உள்ள சா.குறிச்சிப்பட்டியில் தேசியம் காத்த செம்மல் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை சார்பிலும் பசும்பொன்.தேவர் ஐயா நற்பணிமன்றம் சார்பிலும் அரசு பள்ளிகளில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இதையொட்டி இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர்  பிரபாகரன் தலைமையிலும், ராப்பூசல் அரசு மேல் நிலைப் பள்ளியில் தலை மையாசிரியர் திருவாய் மொழி தலைமையிலும், திம்மியம்பட்டி ஊ.ஒ. தொடக்கப் பள்ளியில் மைக்கேல் மதியரசன் தலைமையிலும் என மூன்று பள்ளிகளில் நூறு மரக்கன்றுகள் நடப்பட்டது.

தொடர்ந்து இலுப்பூரிலுள்ள முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் குமார், சக்திவேல், வடிவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News