செய்திகள்

அறந்தாங்கி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை கொள்ளை

Published On 2016-10-27 22:45 IST   |   Update On 2016-10-27 22:45:00 IST
அறந்தாங்கி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அறந்தாங்கியை அருகே உள்ள அரசர்குளம் மேல்பாதியை சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (வயது 72). இவருடைய மனைவி மும்தாஜ் (68). இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல்ரகுமான் கடந்த சில நாட்களுக்கு தனது மனைவி மும்தாஜ்வுடன், ஒரு சிகிச்சைக்காக காரைக்குடி சென்றுள்ளார்.

இதையறிந்த மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு அப்துல்ரகுமான் வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டின் உள்ளே இருந்த பீரோக்களை உடைத்து, அதில் இருந்த 11 பவுன் தங்கநகை, வெள்ளி கொலுசுகள், கைக்கெடிகாரங்கள் போன்றவற்றை கொள்ளை அடித்து சென்று விட்டனர்.

இச்சம்பவம் குறித்து அப்துல்ரகுமான் நாகுடி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News