செய்திகள்
அறந்தாங்கி அருகே பஸ்–லாரி நேருக்கு நேர் மோதல்; கல்லூரி மாணவிகள் உள்பட 41 பேர் படுகாயம்
அறந்தாங்கி அருகே பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், கல்லூரி மாணவிகள் உள்பட 41 பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 9.15 மணிக்கு ஏம்பல் பகுதிக்கு ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்ஸில் ஆவுடையார்கோவில் அருகே உள்ள கள்ளனேந்தலில் செயல்பட்டு வரும் அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் உள்ளிட்ட 60–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்ஸை அறந்தாங்கி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த ரமேஷ் (வயது 30) என்பவர் ஓட்டினார். கண்டக்டராக பள்ளத்தூரைச் சேர்ந்த காளிதாஸ்(24) பணியாற்றினார்.
இந்த பஸ் அறந்தாங்கியை அடுத்த துரையரசபுரம் அருகே உள்ள ஒரு வளைவில் சென்றபோது, தூத்துக்குடியில் இருந்து உரமூடைகளை ஏற்றிக்கொண்டு கறம்பக்குடிக்கு வந்த லாரியுடன் நேருக்கு நேராக மோதியது. இந்த விபத்தில் தனியார் பஸ் மற்றும் லாரியின் முன்பகுதிகள் அப்பளம்போல் நொறுங்கியது.
இதில் கல்லூரி மாணவிகள் மாதேஸ்வரி 18), தேவிகா (19), சத்யா (20), விஜயராணி (20), காயத்ரி (18), பிரியம்மதா (18), பாண்டி பிரியா (20), அனு (20), தீபா (18), சுமித்ரா (18), ஜுவிதா (18), கவிதா (18), சிவகலா (18), கலையரசி (18), கல்லூரி மாணவர் சண்முகசுந்தரம் (18), பஸ் ஓட்டுனர் ரமேஷ் (30), நடத்துனர் காளிதாஸ் (24), உதவி நடத்துனர் ராஜேஷ் (27), லாரி டிரைவர் முரளிதரன் (28), லாரி உதவியாளர் ஜாகீர் உசேன் (21), பஸ் பயணிகள் இளம்பரிதி (34), மும்தாஜ்பேகம் (40), மாதவன் (49), சேகர் (32), சந்திரா (40), கணேசன் (60) உள்பட 41 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் பாரதிதாசன் பல்கலை கழக மாதிரி உறுப்பு கல்லூரி மாணவிகள் மாதேஸ்வரி (18), விஜயராணி (20), லாரி ஓட்டுனர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முரளிதரன் (30), பஸ் பயணிகள் யோகம்பாள் (46), மும்தாஸ்பேகம் (43), சுந்தரி (38), மங்கையர்கரசி (38), ஆகியோர் 7 மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, அறந்தாங்கி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் வேலாயுதம், வருவாய் கோட்டாச்சியர் ரம்யாதேவி, வட்டாச்சியர்பரணி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இச்சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அறந்தாங்கி அருகே தனியார் பஸ்சுடன் லாரி மோதிய விபத்தில் 41 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.