செய்திகள்

முதல்வர் நலம்பெற திரவுபதை அம்மன் கோவிலில் யாகம்

Published On 2016-10-19 20:07 IST   |   Update On 2016-10-19 20:08:00 IST
ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற வேண்டி முள்ளுக் குறிச்சி திரவுபதை அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் அபிஷே ஆராதனையும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் செந்துறை ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
செந்துறை:

தமிழக முதல்வர்  ஜெயலலிதா பூரண  உடல் நலம் பெற வேண்டி முள்ளுக் குறிச்சி திரவுபதை  அம்மன்  கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் அபிஷே ஆராதனையும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் செந்துறை ஒன்றிய செயலாளர்  சுரேஷ்  தலைமையில் நடைபெற்றது.

இதில் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்  கார்த்திகேயன், எம்.ஜி.ஆர். மன்ற இளைஞ ரணி செயலாளர் உதயம் ரமேஷ், ஒன்றிய குழு தலைவர் செல்வராஜ்மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

Similar News