செய்திகள்

அன்னமங்கலம் புனித தோமையார் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை

Published On 2016-10-17 19:15 IST   |   Update On 2016-10-17 19:15:00 IST
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் புனித தோமையார் ஆலயத்தில் நேற்று கிறித்துவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் வேண்டி கூட்டுத்திருப்பலி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள  அன்னமங்கலம்  புனித தோமையார் ஆலயத்தில் நேற்று கிறித்துவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் வேண்டி கூட்டுத்திருப்பலி மற்றும்  மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் புனித தோமையார் ஆலயத்தில்  பங்குதந்தை மரியதாஸ் தலைமையில் ஏராளமான கிறித்துவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண குண மடைய வேண்டும், நலம் பெற்று தமிழகத்தை மீண்டும் ஆள வேண்டும் என்று கூட்டுத்திருப்பலி நடத்தி ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபம் செய்து மெழுகுவர்த்தியுடன் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். 

இதில் அ.தி.மு.க  வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாநில மீனவர் பிரிவு இணைசெயலாளர் தேவராஜன், மாவட்ட அவை தலைவர் துரை, ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயலெட்சுமிகனகராஜ், அன்னமங்கலம் ஆர்த்தர் ஹெல்லர், முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்ணுசாமி,  மாவட்ட இணை செயலாளர் ராணி, மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் முருகேசன், ஒன்றிய இணை செயலாளர்  பெரியம்மாள்நீலன், அன்ன மங்கலம் ஊராட்சித் தலைவர் குதரத்துல்லா, மற்றும் திரளான அ.தி.மு.க வினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Similar News