செய்திகள்

புதுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு

Published On 2016-10-17 19:08 IST   |   Update On 2016-10-17 19:08:00 IST
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி புதுக்கோட்டையில் அ.தி.மு.க வினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
புதுக்கோட்டை:

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி புதுக்கோட்டையில் அ.தி.மு.க வினர் சிறப்பு வழிபாடு நடத்தினர். திருவப்பூர் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோவில், சாந்தாரம்மன் கோவில், புவனேஷ்வரி அம்மன் கோவில் ஆகிய கோவிலில் அ.தி.மு.க வினர் மற்றும் பொதுமக்கள் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இச்சிறப்பு வழிபாட்டில் மாவட்ட செயலாளர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான், தொழில் அதிபர் எஸ்.வி.எஸ். ஜெயக்குமார், நகர்மன்றத் தலைவர் ராஜசேகர், நகரச் செயலாளர் பாஸ்கர், நகர் மன்றத் துணைத் தலைவர் எஸ்.ஏ.எஸ்.சேட் மற்றும் அ.தி.மு.க தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Similar News