ஜெயங்கொண்டம் அருகே காதலியை கர்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்த வாலிபர் கைது
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே வானவநல்லூர் கிராமம் மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகள் சுகன்யா (வயது23). 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். அதே தெருவைச் சேர்ந்தவர் குமரன் மகன் விஷ்ணுபாலன் (26) இருவரும் கடந்த ஒரு வருடகாலமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன் விஷ்ணுபாலன் காதலி சுகன்யாவிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக்காட்டி, அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதில் சுகன்யா கற்பமடைந்துள்ளார். இதுகுறித்து தனது காதலனிடம் தான் 2 மாதம் கர்பமாக இருப்பதை கூறி தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். இதில் உடன்பாடில்லாத விஷ்ணுபாலன் சுகன்யாவைவிட்டு விலக முயற்சித்துள்ளார்.
இதனிடையே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோபமடைந்த விஷ்ணுபாலன் உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது. இதற்கு மேல் நீ என்னை தொந்தரவு செய்தால் உன்னை கொலை செய்து புதைத்துவிடுவேன் என மிரட்டி அடித்துள்ளதாக தெரியவருகிறது.
இதுகுறித்து சுகன்யா தனது பெற்றோர்களிடம் கூறிவிட்டு பின்னர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்கு பதிந்து விஷ்ணுபாலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.