செய்திகள்

குரோம்பேட்டையில் என்ஜினீயர் வீட்டில் கொள்ளை

Published On 2016-10-09 11:43 IST   |   Update On 2016-10-09 11:43:00 IST
குரோம்பேட்டையில் என்ஜினீயர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம்:

குரோம்பேட்டை, ராதா நகர் நம்மாழ்வார் தெருவை சேர்ந்தவர் ராமநாதன். சாப்ட்வேர் என்ஜினீயர். சிறுசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு ராமநாதன் வீட்டை பூட்டிவிட்டு தனி அறையில் குடும்பத்துடன் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து புகுந்தனர்.

பின்னர் பீரோவை உடைத்த அதில் இருந்த ரூ.17 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்தது ராமநாதனுக்கு தெரியவில்லை. இன்று அதிகாலை எழுந்த போது தான் பணம் கொள்ளை போனது தெரிந்தது.

மறைத்து வைத்திருந்த 10 பவுன் நகையை கொள்ளை கும்பல் கவனிக்காததால் அவை தப்பியது.

வீட்டில் உரிமையாளர் இருக்கும் போதே கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News