செய்திகள்
மாமல்லபுரம் விடுதியில் மருத்துவ மாணவியை 2 பேர் பலாத்காரம் செய்தது உறுதி: பரிசோதனையில் தகவல்
மாமல்லபுரம் விடுதியில் மருத்துவ மாணவியை 2 பேர் பலாத்காரம் செய்தது உறுதி என பரிசோதனையில் தகவல் வெளியாகியுள்ளது
மாமல்லபுரம்:
கேரளாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகளான மருத்துவ கல்லூரி மாணவி கடந்த மாதம் 11-ந்தேதி மாமல்லபுரம் ஓத்தவாடை பிரதான குறுக்குத்தெருவில் உள்ள விடுதி ஓன்றில் 2 ஆண் நண்பர்களுடன் வந்து தங்கினார்.
அதில் ஒருவர் அவரது காதலர் என கூறப்படுகிறது. 2 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு ஒரு அறையில் காதலனுடன் மது அருந்தி உல்லாசமாக இருந்துள்ளார்.
மறுநாள் காலையில் மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் மாணவி ஒரு புகார் கொடுத்தார். அதிகாலையில் தனது அறைக்குள் வேறுநபர் ஓருவர் வந்ததாகவும் அவர் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளித்தார்.
பின்னர் செங்கல்பட்டு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதித்த போது 2 பேர் அவரை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
தற்போது சந்தேகத்துக்கு இடமான விடுதி ஊழியர் ஓருவருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது மருத்துவ கல்லூரி மாணவியுடன் வந்த 2 பேரும் 1 மாதம் ஆகியும் இன்னும் பரிசோதனைக்கு வந்து போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் புறக்கணிப்பதால் வழக்கு நிலுவையில் உள்ளது.
போலீசார் கோர்ட்டை அணுகி இருவருக்கும் பிடிவாரண்டு பெற முடிவு செய்துள்ளனர். அவர்கள் 2 பேரையும் பரிசோதித்த பிறகுதான் குற்றவாளிகள் யார் என்று தெரியவரும். இந்த வழக்கில் 2 பேர் குற்றவாளி என்பது உறுதி ஆகியுள்ளது.