செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊராட்சி துணைத் தலைவரின் வீட்டில் மீண்டும் நாட்டு வெடிகுண்டு வீச்சு
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊராட்சி துணைத் தலைவரின் வீட்டில் மீண்டும் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியை சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகர் சசிகுமார் (40). தண்டலம் ஊராட்சி மன்ற துணை தலைவரான இவர் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
நேற்று இவரது வீட்டிற்கு மர்ம நபர்கள் 2 பேர் பைக்கில் சென்று வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டை வீசினர். குண்டு வீட்டின் சுவற்றில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். வெடிகுண்டு வீசிய நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்குப் பின்னர், அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி மீண்டும் சசிக்குமாரின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இன்று மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் நாட்டு வெடிகுண்டை வீசி தாக்கியதில் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர் ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
போலீஸ் காவலுக்கு இருந்தும் தைரியமாக நாட்டு வெடிகுண்டு வீசிய தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.