செய்திகள்
தஞ்சை ஜெபமாலைபுரம் தூய ஜெபமாலை மாதா ஆலய திருவிழா கொடியேற்றம்
தஞ்சை ஜெபமாலைபுரம் தூய ஜெபமாலை மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை நடைபெற்றது.
தஞ்சை ஜெபமாலைபுரத்தில் தூய ஜெபமாலை மாதா ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் பங்குதந்தை தார்கிஸ்ராஜ் கலந்து கொண்டு நவநாள் ஜெபமாலை பிரார்த்தனை செய்து திருவிழா கொடியேற்றி வைத்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி வருகிற 7-ந்தேதி மாலை 6 மணிக்கு நவநாள் ஜெபமாலை பிரார்த்தனை, திருவிழா பாடற்கூட்டுப் பாடல் திருப்பலி, இரவு 9 மணிக்கு தூய ஜெபமாலை மாதாவின் தேர்பவனி, இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
8-ந்தேதி காலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம், இரவு 10 மணிக்கு இன்னிசை கச்சேரி, கலைநிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.