செய்திகள்
சென்னையில் இருந்து புதுச்சேரி வரை நாளை கடலோர பாதுகாப்பு கூட்டு பயிற்சி
சென்னையில் இருந்து புதுச்சேரி வரை கடலோர பாதுகாப்பு கூட்டு பயிற்சி நாளை தொடங்குகிறது.
மாமல்லபுரம்:
கடலோர பாதுகாப்பு கூட்டுப்பயிற்சி ஷசாகர் கவாக்ஷ என்ற பெயரில் சென்னை முதல் பாண்டிச்சேரி வரை நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க இருக்கிறது.
இதை நடத்துவதற்கான முன்னோட்டமாக இன்று காலை இந்திய கடலோர காவல்படை உயர் அதிகாரிகள் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் வந்து கல்பாக்கம் அணுமின் நிலையம், மாமல்லபுரம், கோவளம், முட்டுக்காட் ஆகிய பகுதிகளின் கடல் வழிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் மாமல்லபுரம், கல்பாக்கம், கோவளம் பகுதிகளில் உள்ள கடற்கரை கிராமங்கள், கடலுக்கு செல்லும் மீனவர்கள், கடற்கரையோர விடுதிகள், ரிசார்ட்கள் போன்ற விபரங்களை போலீசாரிடம் சேகரித்துள்ளனர். நாளை காலை 6 மணிக்கு துவங்கும் இந்த பயிற்சி நாளை மறுநாள் மாலை 6 மணியுடன் முடிகிறது.