செய்திகள்

நாகையில் வாலிபர் தற்கொலை

Published On 2016-09-26 15:33 IST   |   Update On 2016-09-26 15:33:00 IST
நாகையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம்:

நாகை சேவபாரதி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் பிரபாகரன் (23). குடிப்பழக்கம் இருந்தது. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

பின்னர் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் வேதனை அடைந்த பிரபாகரன் சேலையால் தூக்கு போட்டு கொண்டார். இதில் மயங்கி விழுந்த அவரை நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து நாகை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News