செய்திகள்
இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கணேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விராலிமலை:
இலுப்பூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்ற மாவட்ட கலெக்டர் கணேஷ் அலுவலக பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது போதுமான ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் தாமதிக்காமல் உரிய முடிவுகள் எடுக்கப்பட்டு மனுதாரர்களுக்கு உத்தரவுகள் வழங்க வேண்டுமென்றும், அலுவலர்கள் தங்கள் பணிகளை விரைந்து முடிக்கவேண்டுமென்றும் அறிவுறித்தினார்.
தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் இயங்கும் இ-பொது சேவை மையம், ஆதார் அடையாள அட்டை எடுக்கும் மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் தாசில்தார் தமிழ்மணி, இலுப்பூர் பேரூராட்சித்தலைவர் குரு.ராஜமன்னார் , செயல் அலுவலர் சுலைமான்சேட் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.