செய்திகள்

வேளாங்கண்ணி அருகே தாயை வெட்டிக் கொன்ற மகன் கைது

Published On 2016-09-23 15:35 IST   |   Update On 2016-09-23 15:35:00 IST
வேளாங்கண்ணி அருகே தாயை வெட்டிக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள வண்டலூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் குப்பன் மனைவி சிவபாக்கியம் (70). இவரது மகன் ஜீவா என்கிற ஜீவானந்தம் (40). மரம் வெட்டும் தொழிலாளி.

சம்பவத்தன்று சிவபாக்கியம் அதே பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜீவானந்தம் ஆட்டை விற்க போவதாக கூறினார். பின்னர் ஒரு ஆட்டை பிடித்து சென்று தனது வீட்டில் கட்டி வைத்து இருந்தார்.

இதனை மீட்க சிவபாக்கியம் சென்றார். அப்போது ஆத்திரம் அடைந்த ஜீவானந்தம் அரிவாளால் சிவபாக்கியத்தின் தலையை அறுத்து கொன்றார்.

பின்னர் தலைமறைவாகி விட்டார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீவானந்தத்தை தேடி வந்தனர். அவர் வண்டலூரில் உள்ள ஒரு வாய்க்கால் பகுதியில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று ஜீவானந்தத்தை கைது செய்தனர்.

Similar News