செய்திகள்
நாகையில் கோர்ட்டு வளாகத்தில் கைதி தப்பி ஓட்டம்
நாகை நீதிமன்ற வளாகத்தில் கைதி தப்பி ஓடினார். இதுபற்றி கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிந்து சாகுல் ஹமீதுவை தேடி வருகின்றனர்.
நாகை:
நாகை 2-வது கடற்கரை சாலையை சேர்ந்தவர் ஹசன்சாகுல்ஹமீது (வயது 35). இவர்மீது கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் செயின்பறிப்பு வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கீழ்வேளூர் சப்-இன்ஸ்பெக்டர் புயல் பாலசந்திரன் மற்றும் போலீசார் சாகுல்ஹமீதுவை நாகை முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் கவிதா வழக்கை தள்ளுபடி செய்தார். எனினும் முறைப்படி அவரை சிறைச்சாலையில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் சாகுல் ஹமீது மீது திருவாரூர், திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையங்களில செயின் திருட்டு வழக்குகள் உள்ளது. இதனால் நாகை சிறையில் இருந்து திருவாரூர் சிறைக்கு அனுப்பி விடுவார்கள் என்று நினைத்த சாகுல்ஹமீது, நீதி மன்றம் அருகிலேயே உள்ள சிறைச்சாலைக்கு அழைத்து சென்ற போது, திடீரென போலீசை ஏமாற்றி அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிந்து சாகுல் ஹமீதுவை தேடி வருகின்றனர்.