செய்திகள்

திருமங்கலம் அருகே வங்கி பணத்தை மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்கு

Published On 2016-09-21 19:30 IST   |   Update On 2016-09-21 19:30:00 IST
வங்கிப் பணத்தை மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டியை சேர்ந்த மருது மனைவி பஞ்சவர்ணம். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினரான இவர் உள்பட 12 பேர் கடந்த 2008ம் ஆண்டு தலா ரூ.10 ஆயிரம் வங்கிக் கடன் பெற்றுள்ளனர்.

இதனை சாப்டூர் சந்திரசேகரன், முகவராக இருந்து திருமங்கலம் பாண்டியன் கிராம வங்கி மூலம் பெற்று கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை அனைவரும் கட்டி விட்ட நிலையில், தற்போது வங்கியில் இருந்து அசல் மற்றும் வட்டி கட்டப்படவில்லை என நோட்டீசு வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பஞ்சவர்ணம், கள்ளிக்குடி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தங்களுக்கு கடன் பெற்றுத் தந்த சந்திரசேகர் ஏற்பாடு செய்திருந்த குராயூர் கவிதா, சோழம்பட்டி கார்த்திகை செல்வி ஆகியோரிடம் மாதா, மாதம் தவணை தொகை கொடுத்தோம். கடந்த 2010-ம் ஆண்டிலேயே கடன் தொகையை கட்டி முடித்து விட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சந்திரசேகர், கவிதா, கார்த்திகை செல்வி ஆகியோர் மீது வங்கிப் பணத்தை கையாடல் செய்ததாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News