செய்திகள்

கரூர்-பசுபதிபாளையம் பாலத்தை திறக்காவிட்டால் நாங்களே திறப்போம்: காங்கிரசார் அறிவிப்பு

Published On 2016-09-21 18:48 IST   |   Update On 2016-09-21 18:48:00 IST
கரூர்-பசுபதிபாளையம் பாலத்தை திறக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கரூர்:

கரூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரசார் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர தலைவர் சுப்பன், இனாம் கரூர் நகர தலைவர் கருணாகரன், தான்தோணி நகர தலைவர் ராமரிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஐ.என்.டி.யு.சி. தலைவர் அம்பலவாணன், மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் நாகராஜன்,ஆடிட்டர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் ஸ்டீபன்பாபு, வர்த்தக காங்கிரஸ் தலைவர் விஜய் ஆண்டனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இரு தினங்களுக்கு முன்பு கரூரில் அரசு பஸ்சும், மணல் லாரியும் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியானார்கள். சமீபகாலமாக அரசு பஸ்கள் மற்ற வாகனங்களுடன் மோதி உயிர்ச்சேதம் அதிகமாக நடக்கிறது. இதற்கு போக்குவரத்துத்துறை தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்.

தண்ணீர் தர மறுக்கும் கேரளாவுக்கு மணல் சப்ளை செய்வதை உடனே தமிழக அரசு நிறுத்த வேண்டும்.

காவிரி பிரச்சினைக்கு அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக உடனே கூட்ட வேண்டும்.

கடந்த 10 தினங்களாக தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு நடக்கவில்லை. இதற்கு தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரூர்-பசுபதிபாளையம் இணைப்பு பாலம் கட்டி முடிக்கப்பட்டு இன்னமும் திறக்கப்படவில்லை. ஒரு வார காலத்திற்குள் பாலம் திறக்கப்படவில்லையென்றால் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுமக்களை திரட்டி நாங்களே திறப்போம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News